என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேராவூரணி விவசாயிகள் சாலை மறியல்"
பேராவூரணி:
மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தது.22-ந் தேதி கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் இதுவரை பேராவூரணி கடைமடைப் பகுதிக்கு வரவில்லை. ஒருபக்கம் காவிரி நீர் கடலில் கலக்கிறது. ஒரு பக்கம் ஏரி குளங்கள் காய்ந்து கிடக்கிறது. பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களில் காவிரி நீர் வரத்து இல்லாமல் வயல் வெளிகள் காய்ந்து கிடக்கிறது. வாய்க்கால்கள் தூர்வாரப் படாமலும், உரிய பராமரிப்பு இல்லாததால் காவிரி தண்ணீர் கடை மடைப் பகுதிக்கு எட்டாக் கனியாக உள்ளது.
இதனை கண்டித்து பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த கடைமடைப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் விடக்கோரியும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முன்னதாக பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த தாசில்தார், பொதுப்பணித் துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல் கருப்பையா,வேலுச்சாமி, நீலமோகன் உள்ளிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.